ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் வருகை!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தனர்.

காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு, கடந்த 19 நாள்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழக முதல்வர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து பணிகளைத் தொடர்வார் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் கூறினார்.

“நாங்கள் இருவரும் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Read previous post:
0a
“அஜித் பெயரை இனி உபயோகிக்க மாட்டேன்” என சிம்பு சொன்னதால் சர்ச்சை!

“என் படங்களில் இனி அஜித் பெயரை உபயோகிக்க மாட்டேன்” என்று சிம்பு கூறியதால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு சிம்பு விளக்கம் அளித்துள்ளார். தனது ஃபேஸ்புக்

Close