“இன்னும் ஓரிரு தினங்களில் மற்றொரு அதிசயத்தை காண்பீர்கள்!” – கருணாநிதியின் மருத்துவர்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்து, முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கவலை அளிக்கக் கூடிய வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், ஓராண்டுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் வருகை புரிந்திருப்பது திமுகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால் கூறுகையில், “கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மற்றொரு அதிசயத்தை காண்பீர்கள்” என்றார்.