மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (7ஆம் தேதி) இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டதால், இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து மதிப்பீடு செய்வதுடன், தேவையான மருத்துவ மற்றும் செவிலிய உதவிகளை அவரது வீட்டிலேயே காவேரி மருத்துவமனை அளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

0a1a

Read previous post:
0a1
மனிதாபிமானம் வேறு; ஜெ.வின் தவறுகளை மறைத்து அவரை புனிதப்படுத்துதல் என்பது வேறு!

“ஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன்”

Close