ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்: தமிழக அரசியல் சூழல் பற்றி விவாதித்தார்!

தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக டெல்லி சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இன்று டெல்லியில் கமல்ஹாசனுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. தமிழக அரசியல் சூழல் உட்பட எங்கள் இரு கட்சிகளின் விவகாரங்கள் தொடர்பாக விரிவாக நாங்கள் விவாதித்தோம். (Enjoyed meeting @ikamalhaasan in Delhi today. We discussed a wide range of issues concerning our two parties, including the political situation in Tamil Nadu)”. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கமல்ஹாசன், “நேரம் ஒதுக்கியதற்கும், பகிர்ந்துகொண்ட கருத்துகளுக்கும் நன்றி ராகுல் காந்திஜி. நம் உரையாடல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். (Thank you @RahulGandhi Ji for the time and inputs. Hope our conversation was useful to you as well)” என்று கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1h
தூத்துக்குடி படுகொலையை கண்டித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது!

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13

Close