பூணூலை பற்றி கமல்ஹாசன் கீழ்த்தரமாக விமர்சிப்பதா?: பார்ப்பனர்கள் கொந்தளிப்பு!

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு ரசிகர், “நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?” என ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார்.

இக்கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது. அது என்னை மிகவும் பாதித்த நூல். ‘பூணூல்’. அதனாலேயே அதை தவிர்த்தேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

0a1i

சமீபத்தில் தனது டிவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்த்தரமாக விமர்சித்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம்.

யாரோ ரசிகர், தங்களுக்கு பிடித்த நூல் எது என்று கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலை கூறாமல், ஏதோ சிலேடையாக பதில் கூறுவதாக நினைத்துக்கொண்டு, பிராமண மக்களின் புனித அடையாளச் சின்னத்தை கீழ்த்தரமாக விமர்சித்தது அவரது வக்ரபுத்தியை காட்டுகிறது.

இந்த பூணூலால் இவருக்கு என்ன பிரச்சனை இதுவரைக்கும் வந்தது? பூணூலை குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

தான் நடித்த ‘மைக்கேல் மதன காமராசன்’, ‘தசாவதாரம்’, ‘மீண்டும் கோகிலா’ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற பிராமண கதாபாத்திரங்கள் / பிராமண வேஷம் என்று நடித்து, பணத்திற்காக கலையை விற்கும் ஒரு வியாபாரி, தான் பிறந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேவலம், வேறு எந்த ஜாதியிலும் இருக்காது.

ஜாதி இல்லை என்று கூறிக்கொண்டு இவர் நடித்த ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ மற்றும் பல படங்களில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்திக் காட்டியவர் தான் இந்த வேஷதாரி. தைரியமிருந்தால் மற்ற சமூகத்தினரையும் விமர்சிக்கட்டும்.

புரட்சித்தலைவி நம் அன்பு சகோதரி உயிருடன் இருக்கும் வரையில் இவர் எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இந்த அரைவேக்காடு, போலி அரசியல்வாதி, பிராமண குலத்தில் பிறந்ததற்காக நாங்கள் மிக்வும் வெட்கப்படுகிறோம் / மனவேதனை அடைகிறோம்.

வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.