“பணம் கொடுத்தால் என்ன வேண்டு மானாலும் செய்வீர்களா கமல்?”

விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனங்கள், கமலுக்கு கடும் கண்டனங்கள்…

பிக் பாஸ் போன்ற சமூக சீரழிவு நிகழ்வுகளை தமிழ்நாட்டில் ஒளிபரப்புவது வக்கிரமான செயல். ஏற்கனவே தமிழ்நாட்டு குடும்பங்களை சீரழித்ததில் விஜய் தொலைக்காட்சிக்கு பெரும்பங்கு உண்டு. இப்போது பிக் பாஸ் ரூபத்தில் அது அழிக்க முடியாத வடுவாக மாறப்போகிறது.

இது போன்ற தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகளை நடத்த கமல் எதற்கு என்று தெரியவில்லை. பணம் என்பதை தவிர இந்த நிகழ்வை நடத்த கமல் ஒப்புக்கொள்ள வேறெந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா கமல்?

என்னுடைய கடை மிகுந்த நட்டத்தில்தான் இயங்குகிறது. இந்த நேரத்தில் கடும் பொருளாதார பிரச்சனையில் இருக்கிறேன். “ரஜினி படத்தில் பணிபுரியுங்கள் பத்து லட்சம் தருகிறோம்” என்றோ, “கமல் நல்ல கலைஞன், சிவாஜி நல்ல நடிகன் என்று எழுதுங்கள், சில லட்சங்கள் தருகிறோம்” என்றோ யார் சொன்னாலும், செவி மடுக்க மாட்டேன். அதற்கு பேசாமல் தெருவில் இறங்கி பிச்சை எடுப்பேன்.

பணம்தான் வாழ்க்கை என்றால் இதுநாள் வரை சினிமாவை மெச்சி பேசியதெல்லாம் எதற்காக, யாருக்காக இந்த வேடம் போடுகிறீர்கள் கமல்?

Arun Mo