“கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமா துறையும் தடுத்தாக வேண்டும்!” – கமல்ஹாசன்

வட்டிக்கு கடன் கொடுத்த பிரபல ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகால மரணம் போல் இனி நிகழவிடக் கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.

இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்

Read previous post:
0a1d
“அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை!” – ரஜினிகாந்த்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில்

Close