‘இஸ்ரேல் பொறுக்கி’ சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதில்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மெரினாவில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும், இப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்திருந்தால் நிச்சயம் மெரினாவுக்கு நேரில் சென்று சந்தித்திருப்பார் என்றும் நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தார்.

தமிழின உணர்வுடன் போராடுபவர்களையெல்லாம் “தமிழ் பொறுக்கிகள்” என்று வாய்க்கொழுப்புடன் அநாகரிகமாக வசை பாடும் “இஸ்ரேல் (மொசாத்) பொறுக்கி” சுப்பிரமணியன் சுவாமி, கமலின் இந்த ட்விட்டை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். “சினிமா வாலா கமல்ஹாசனின் இந்த கருத்து முட்டாள்தனமானது” என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள கமல், “ஹாய் சாமி! நான் தமிழ் வாலா! முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகத் தான் இருந்தார்கள். அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?’ என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுப்பிரமணியன் சுவாமிக்கு இனி பதில் சொல்ல விருப்பம் இல்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.