கானக புகைப்படக் காரராக ஆண்ட்ரியா நடிக்கும் கிரைம் திரில்லர் – ‘கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘கா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் ‘காடு’, ‘கானகம்’ என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உலக மக்களுக்கான இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும், குணாதிசயங்களையும் பதிவு செய்யும் கானக புகைப்படக்காரர் (Wildlife Photographer) கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசுm,  நீண்ட இடைவெளிக்குp பிறகு சலீம் கவுஸூம்  நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – அறிவழகன்

இசை – அம்ரிஷ்

எடிட்டிங் – கோபிகிருஷ்ணா

கலை – லால்குடி இளையராஜா

ஸ்டன்ட் – விக்கி

நிர்வாக தயாரிப்பு – சங்கர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

இணை தயாரிப்பு – ரவிகாந்த்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்

கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ள ‘கா’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று (29-04-2018) சிறப்பாக நடைபெற்றது. இதில் நாயகி ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

0a1c

 

Read previous post:
n5
“நான் சாவித்திரியாக மாறுவதற்கு அவரது மகள் எனக்கு உதவியாக இருந்தார்!” – கீர்த்தி சுரேஷ்

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. இது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வருகிற மே 9ஆம்

Close