ராகுலின் காங்கிரசுக்குள் தொழில்நுட்ப புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘குத்து’ ரம்யா!

காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவு, முன்னெப்போதும் இல்லாத அளவு உயிர்ப்புடன் இயங்குகிறது. தேச அளவில் புதிய அணுகுமுறைகள் வந்தாலும், மாநில அளவில் அந்தந்த பிராந்திய பிரச்சனைகள், நடைமுறை சாத்தியங்களை வைத்து தனியான திட்டங்களை வகுத்து செயல்படுகிறார்கள்.

குஜராத் தேர்தல் சமயத்தில் ‘விகாஸ் காண்டோ தாயோ சே’, (குஜராத் மாடலுக்கு மறை கழன்று போய் விட்டது) எனும் காங்கிரஸ் வாசகம் பெரும் வைரலடித்து மோடியே அதனை குறிப்பிட்டு பேசும் அளவுக்கு போனது.

ஜி.எஸ்.டிக்கு ராகுல் காந்தி பயன்படுத்திய ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்ற பதமும் பிரபலமானது.

அதேபோல கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னெப்போதும் இல்லாமல் சமூக ஊடகங்களில் ட்விட்டர், முகநூல் பக்கம், வாட்சப் என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ஒருவர். காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். புதிதாக விளமபரத் துறையில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். ராகுல் காந்தி இவரின் திறமையை அறிந்து முழு சுதந்திரம் கொடுத்து இயங்க அனுமதித்து இருக்கிறார்.

இவர் பெயர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் குத்து ரம்யா என்று அறியப்பட்டவர். இவர் காங்கிரசில் சேருகிறார் என்ற செய்தி வந்தபோது கடுமையான கிண்டல் கேலிகள் முகநூலில் பதிவாகின. ஒரு பெண், அதிலும் ஒரு நடிகை என்றாலே கேவலமாக பார்க்கும் இந்திய ஆண் புத்தி அப்போதும் வெளிப்பட்டது. அவர் அரைகுறை உடையில் டூயட்டுகளில் நடனமாடும் போட்டோக்கள் பகிரப்பட்டது. அவரின் பிறப்பே கூட கேள்விக்கு உள்ளாக்கப் பட்டது.

அந்தப் பெண்மணிதான் இப்போது பழமை வாய்ந்த கட்சிக்குள் ஒரு தொழில்நுட்பப் புரட்சியையே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

(இந்த செய்திக்கான லிங்க்: http://www.thehindu.com/todays-paper/tp-national/how-cong-found-its-voice-on-social-media/article22389591.ece

SRIDHAR SUBRAMANIAM