இந்த கூட்டம் எதற்காக இப்படி அலைமோதுகிறது…?

இலவசமாக ஏதும் வாங்க வந்த கூட்டமா?

மருத்துவமனையில் நிற்கும் கூட்டமா?

ரெண்டுமே இல்லை.

நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவியர் சேர்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோர்கள் கூட்டம் தான் இப்படி அலைமோதுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாநில அளவில் ரேங்க் எடுத்து சாதனை புரிந்த பள்ளி என்பதால் தான் இப்படி ஒரு கூட்டம்.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளியும்கூட.(அரசு பள்ளி என்பதை நினைவில் கொள்க..)

கட்டணம் வெறும் ரூ.50, மற்றும் ரூ.200/- மட்டுமே. வேறு எதுவும் இல்லை.

சுமார் 5000 மாணவியர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மட்டும் உண்டு. போதிய அளவில் கழிப்பறை, தண்ணீர் வசதிகளும் தேவைப்படுகிறது.

நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் கல்வி நிறுவனம் இது.

– இரா.நாறும்பூ நாதன்

 

Read previous post:
0a1r
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும்: பாமக வலியுறுத்தல்!

'இந்தியாவில் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என்று பாமக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து

Close