ஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்தப் பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்துவந்த ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் “கமனம்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கதை-திரைக்கதை-இயக்கம்: சுஜனா ராவ்

தயாரிப்பாளர்கள்: ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் V.S

இசை: இளையராஜா

DOP: ஞான சேகர் V.S

வசனம்: சாய் மாதவ் புர்ரா

படத்தொகுப்பு: ராமகிருஷ்ணா அராம்

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

 

Read previous post:
0a1b
”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்!” – தியாகு

தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர்

Close