‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு பிரான்ஸ் தமிழச்சி நோஸ் கட்!

தோழர் சுப.வீ எழுதிய மடல் என்பது மானூட அறம் சார்ந்தது. அதற்கு நையாண்டித்தனமாக பதில் அளிப்பதென்றால் தோழர் சுப.வீயோடு மட்டும் வைத்துக் கொள்ளவும். “பிரான்ஸ் தமிழச்சி எனக்கு மடல் எழுதினாலும் இதுதான் பதில்” என்று முடித்திருக்கக் கூடாது.

பார்ப்பான் எஸ்.வி.சேகருக்கு ‘மடல்’ வரைந்து, “பார்ப்பானிடம் பார்ப்பனீயம் குறித்து புளுகூரை கேட்க நான் என்ன கொலை குற்றவாளி பார்ப்பான் சங்கராச்சாரியின் பக்தையா?”

இந்திய நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை மறைக்க அவ்வப்போது மோடி அரசு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மாட்டு சர்ச்சையை உருவாக்குவதும், யோகாவை விளம்பரப்படுத்துவதும் சாதாரண இந்திய மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். அரசியல் விமர்சகர்கள் பாஜகவினரின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அறிந்தவர்கள்.

நியூஸ்7 நிகழ்ச்சியில் தோழர் மதிமாறன் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் மோடி அரசாலும், யோகா ஆதரவாளர்களாலும் பதில் அளிக்க முடியாத அளவிற்கு பார்ப்பான் நாராயணனின் குரல்வளையை தோழர் மதிமாறன் நெரித்ததன் விளைவு…

…. மாட்டு மூளை சலசலத்து வெடவெடத்து கத்த ஆரம்பித்து… உங்களிடம் வந்து கதற ஆரம்பித்தது. எதிர் விளைவு, நீங்கள் தோழர் மதிமாறனை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கக் கூடாது என்று அதிகாரத்தை கையில் எடுத்தது.

இதை வீடியோவாக பதிவிட்டு, “இனி எவனாவது பார்ப்பான்னு பேசி பாருங்க… பாஜகவை எதிர்த்து பாருங்க….” என்று ஆணவமாக பேசிவிட்டால் பெரிய பருப்பா?

நானெல்லாம் நாளுக்கு 3 வேளை மாட்டுக்கறி தின்று பெரியாரியாரியம் / அம்பேத்கரியம் / மார்க்சியம் / கம்யூனிஸம் பேசுபவள். என்னிடம் ‘மடல்’ வருமா என்று எதிர்பார்க்க கூடாது.

“பூணூலை அறுத்து வைத்துவிட்டு இப்ப பேசு…” என்கிற ரகம்.

சு.ப.வீக்கு எழுதிய மடலில், “நாங்கள் எல்லாம் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். அது தேவையில்லை என நினைப்போருடன் ஒத்துப்போக இயலாது” என்கிற வார்த்தையை சொருகி வைத்திருக்கிறீர்கள்.

பொம்பள குளிக்கிறதை எட்டிப் பார்த்து இளிக்கிற விடலை பையன் கேரக்டரில் நடிக்கிற பயபுள்ள தானே நீங்க? சினிமாக்கார கூத்தாடிகள் எல்லாம் ஒழுக்கம் பற்றி பேசலாமோ?

‘சங்கராச்சாரி என் கையை பிடித்து இழுத்து படுக்க வறீயான்னு கூப்பிட்டான்’ என பார்ப்பனப் பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியது டக்கென்று நினைவுக்கு வருகிறது. அதேபோல் ஆரியக் கடவுள்களுக்கு கற்பித்த ஒழுக்கங்களும், புராணங்களும், ஆபாச சிலைகளும் நினைவுக்கு வருகின்றன…

‘ஒழுக்கம்’ சார்ந்த விவாதத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அதில் நீங்களும் நானும் கலந்து கொள்வதைப் போல் ஒரு வாய்ப்பு கிடைத்தால்…. நீங்களே பூணூலை அறுத்து போட்டுவிட்டு ஓடிப் போய்விடுவீர்கள்…. அந்தளவுக்கு கேள்வி கேட்பேன்.

என்னிடம் ஒரு பாலிசி இருக்கிறது.

‘அதிகாரமற்ற நபர்கள் மீது நான் அதிகாரத்தை செலுத்துவதில்லை.’

உங்களை பொருத்தவரை உங்களுடைய பார்ப்பனன் அதிகாரம் இந்தியாவிற்குள் மட்டும்தான். என்னிடம் எடுபடாது.

‘மதமும், சாதியும் தாய் தந்தை போன்றது’ என்பவர் நீங்கள்.

‘மதமும், சாதியும் மனிதனுக்கு விரோதி’ என்பவர்கள் நாங்கள்.

நீங்கள் ஏற்கும் ஆரியக் கோட்பாடு அனைத்தும் தமிழர்களை இழிவுபடுத்தும், திராவிடர் கோட்பாட்டிற்கு எதிரானது என மக்களிடையே பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடும் சமத்துவ போராளிகள் நாங்கள். நாங்கள் மக்களுக்கான போராட்ட களத்தில் நிற்கிறோம்…. மக்கள் விரோத அரசியலை எதிர்த்து போராடுகிறோம்….

சுவாதி, ராம்குமார், ஜெயலலிதாவை படுகொலை செய்த உங்கள் ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்பாக நான் பல வேலைகளில் ஈடுபட வேண்டி இருக்கிறது. இதற்கிடையே…

உங்களுடைய மொக்கை வார்த்தைகள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி போன்றது. தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டு வரும் அரசியல் விழிப்புணர்ச்சியை….

….. தற்போது பார்ப்பான் கமலை வைத்து மூளையை மழுங்கடிக்கச் செய்யும் வேலை ஆரம்பித்தது போல், என்னையும் சினிமாக்கார காமெடியனோடு விவாதிக்கும் அளவிற்கு திசை மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டாம்!

பார்ப்பான்களின் சூழ்ச்சிக்கு பெரியார் தொண்டர்கள் எப்போதும் பலியாக மாட்டார்கள்!

#தமிழச்சி