ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது பற்றி வாய் கொழுப்பில் வார்த்தைகளை உதிர்த்த மாஜி நடிகை!

“முத்த போராட்டத்திற்கும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை” என்று திரைப்பட முன்னாள் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய வருணாசிரம அதர்ம அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் ராஜகோபாலன் நேற்று பிற்பகல் ஐஐடி வளாகத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த மணீஷ் என்ற வருணாசிரம அதர்ம மாணவன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திரைப்பட முன்னாள் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

”மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் தவறானது. அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

”இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன். ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது.

“மாட்டுக்கறி சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை. முத்த போராட்டத்திற்கும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம்” என்று ட்விட் செய்துள்ளார் கஸ்தூரி