ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், வடிவேலு காமெடியும்!

ஒரு படத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக வடிவேலு வருவார். அவருடன் முத்துக்காளை வருவார். ஒரு டீக்கடைக்கு வடிவேலு சென்று, ஸ்டூலில் அமர்ந்து, டீ சொல்லுவார். முத்துக்காளை வடிவேலுக்கு விசிறி கொண்டிருப்பார்.

‍‍‍‍‍‍ ‍‍வடிவேலுவைப் போலவே வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் வந்து, அவருக்கு எதிரில், சேரில் உட்காருவார். கால் மேல் கால் போடுவார்.

முத்துக்காளை உசுப்பேத்த வடிவேலுவும் கால் மேல் கால் போடுவார்.

எதிரில் இருப்பவர் பேப்பர் படிப்பார். முத்துக்காளை பார்த்ததும், வடிவேலுவும் பேப்பர் எடுத்து படிப்பார்.

எதிராளி பேப்பரை மடித்துவிட்டு, சேரில் சாய்ந்து உட்காருவார். வடிவேலுவும் முத்துக்காளையை பார்த்துவிட்டு சாய்வார். அப்படியே மட்டமல்லாக்க கவிழ்ந்து, ‘பப்பரப்பா’வென சகதிக்குள் போய் விழுவார் வடிவேலு. உடன் இருந்து உசுப்பேத்திக் கொண்டிருந்த முத்துக்காளை ஓடி விடுவார்.

பாவம் தீபா…!

RAJASANGEETHAN JOHN