சீமான் பேச்சை கேட்க நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

நாகபட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூரில் நேற்று (ஏப்ரல் 8) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த நாகபட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்து சீமானின் பேச்சை ரசித்து கேட்டார்.

0a1a

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வந்திருப்பதை அறிந்த சீமான், அவரை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அரசியல் மாறுபாடுகளைக் கடந்து செல்வராஜூம், சீமானும் பரஸ்பர பரிவுடன் நட்பு பாராட்டியது கண்டு, கூடியிருந்த பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தார்கள்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜிடம் கேட்டபோது, ”பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சீமான் பேசிக்கொண்டிருந்தது நன்றாக இருந்ததால் அமர்ந்து அவரது பேச்சை கேட்டேன். நான் வந்திருப்பதை அறிந்து சீமான் எனக்கு வாழ்த்து தெரிவிக்க மேடைக்கு அழைத்தார். இது ஒரு எதார்த்தமான நிகழ்வு” என்று கூறினார்.