திமுக தேர்தல் அறிக்கை: சில விமர்சனங்கள்!

வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் மீது சில விமர்சனங்கள்:-

சுப.உதயகுமாரன்: தி.மு.க.வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவார்களாம். என்னே அன்பு, என்னே அக்கறை! கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் போராடிக்கொண்டிருப்பது பாசிச ஜெயா அரசு எங்கள் மீது போட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதற்காக அல்ல. தரமற்ற, பாதுகாப்பற்ற கூடங்குளம் அணுஉலைகளை மூடுவதற்காக! அங்கே கூடுதல் அணுஉலைகள் கட்டாமல் இருப்பதற்காக! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இது புரியவில்லையா, அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? அடிப்படை பிரச்சினையை விட்டுவிட்டு, அதையும் இதையும் பேசி ஆளை ஏய்க்கும் வேலையை இனியாவது கைவிடுங்கள்!

$

தி.மு.க.வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம்எனும் தலைப்பின் கீழ் கூடங்குளம் திட்டப் பகுதியில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று அறிவித்து நம்மைத் தொடர்ந்து முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்கள். வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பேருதவியுடன் கடந்த ஆண்டு தி.மு.க. தலைவரை அவரது வீட்டில் சந்தித்து கூடங்குளம் பிரச்சினை குறித்து நேரில் விளக்கினோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் தங்கள் கட்சி எம்.பி.க்களை தில்லிக்கு அனுப்பி பிரதமரிடம் முறையிடுவதாகச் சொன்னார். இன்றுவரை அது நடக்கவில்லை. திரு. ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து முறையிட்டோம். திரு. கனிமொழி அவர்களை தில்லியிலே சந்தித்துப் பேசினோம். எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

தில்லி அதிகார பீடத்தை பகைத்துக்கொள்ள வேண்டாமென்று கள்ளமெளனம் சாதித்த தி.மு.க. இப்போது வழக்கம்போல கபட நாடகம் ஆடுகிறது. வழக்கை திரும்பப் பெறுவார்களாம், வேலைவாய்ப்பை உருவாக்குவார்களாம். தி.மு.க.வின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான, தமிழர்களுக்கு உழைப்பதற்காகவே இம்மண்ணில் பிறந்து வாழும் அவதாரப் புருடர் திரு. டி.ஆர். பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கைக் குழு இப்படி கதை விடுகிறது. தி.மு.க.வின் கூடங்குளம் நாடகம் அதே பழைய வசனத்தின் புதிய உச்சரிப்புடன் தொடந்து நடக்கிறது.

இதைத் தொடர்ந்து எட்டு கோடி தமிழர்களின் ஈடு இணையற்ற அம்மா கூடங்குளம் பகுதியில் வசிக்கும் தென் தமிழக மக்களையும் படிப்படியாக மூடுவோம் என்று விரைவில் அறிவிக்கலாம்.

அய்யா வைகோ அவர்கள் கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தூக்கி எறிவோம் என்று அண்மையில் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

# # #

வாட்ஸ் ஆப்பில் பரவும் ஒரு பதிவு: திமுகவின் வெற்று தேர்தல் அறிக்கையும் நமது கேள்வியும்.

கச்சத்தீவை மீட்போம்.
● கொடுத்தது யாரு..??

சல்லிக்கட்டு நடத்த முயற்சிப்போம்.
● நடத்தவிடாம பண்ணினது யாரு..??

அண்ணா உணவகம் அமைப்போம்.
● அம்மா உணவகத்தை ஏமாற்று வித்தைனு விகடன்ல சொன்னது யாரு..??

விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்.
● விவசாயிக்கு காவிரியிலும், முல்லைப்பெரியாறுவிலும் துரோகம் செய்தது யாரு..?? மீதேனில் கையெழுத்து போட்டது யாரு..??

தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்.
● ஒன்பது வருசமா மத்தியரசில் இருந்துபொழுது ஒன்பது துவாரத்தையும் மூடிக்கிட்டு இருந்தது யாரு..??

ஏரிகள் தூர்வாரப்படும்.
● ஏரியை வளைச்சி வளைச்சி ஆட்டையைப் போட்டது யாரு..??

மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தம்.
● அதை முதன்முதலில் அறிமுகப்படுத்திய அயோக்கியன் யாரு..??

மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள்.
● அந்த மீனவர்களை பேராசை பிடித்தவர்கள்ன்னு சொல்லி அசிங்கப்படுத்தியது யாரு..??

ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.
● உலகமகா ஊழல் செய்த கொபசெவும், திருட்டு பிள்ளையும் யாருடையது..??

இன்னும் என்னென்ன காமெடி பண்ணப்போறானுங்களோ இந்த திருட்டு கும்பல் திமுக பாய்ஸ். – Whatsapp fwd..

# க.க.க.போ…

# # #

விஜய் பாஸ்கர் விஜய்: ஆணவக்கொலை பற்றி ஒருவார்த்தை கூட அறிக்கையில் இல்லை… அதை எப்படி தடுப்பார்கள் என்பெதல்லாம் இல்லை… கேட்டால் அதை எங்கள் போலீஸ் கவனித்துக் கொள்ளும் என்பார்கள்.. குறிப்பிட்ட இண்டர்வெல்லில் ஆணவக் கொலை நடந்து கொண்டே இருக்கும் என்பதை அனைவரும் அமைதியாக ஒப்புக் கொண்டுவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்து இன்னும் 200 ஆண்டுகள் கழித்து சமத்துவம் வரும் என்பதை திமுக அதிமுக போன்ற கட்சிகள் தெளிவாக சொல்கின்றன. ஒரு நல்ல ’ஜாதி இந்து’வின் மனநிலை இது …

கலப்புத் திருமணம் செய்தால் 60000 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். சங்கரை வெட்டிக் கொல்லாமல் இருந்திருந்தால் அவரே மாதம் ஒரு லட்சம் சம்பாதித்து இருந்திருப்பார். இன்னும் நிறைய யோசிக்க இருக்கிறது…