நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி – ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’!

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில், படிப்பைத் தாண்டி  வியக்கத் தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர்.

‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் புளூ ஐஸ் புரொடக்சன்ஸ் நிர்வாகத்தின் நிறுவனர்  சி.சுதாகர், இந்நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:

”தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையில், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தர வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும்  எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும், திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ள்ளது.

திறமைகளுக்கு பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடி கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் ‘மதிப்பெண் கொடுப்பது மற்றும்  நீக்குதல்’ என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்குவார். இந்த அபரிமிதமான திறமைகளை கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற்கொள்வர். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளிகொண்டுவருவார்.

இந்த குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியப்பட வைப்பார்கள் என்பது உறுதி. இதை தவிர  அதிரடி சிறப்பு விருந்தினர்கள்,  குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுனர்களின் கருத்து ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாகும்.

அபாரமான திறமைகளை கண்டெடுத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்து வருகிறது.

இவ்வாறு சி.சுதாகர் கூறினார்

 

Read previous post:
0a1c
“லைக்காவின் கரு’ படம் ஜீவனுடன் அழகாக இருக்கும்!” – இயக்குனர் விஜய்

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய்.

Close