வைஷ்ணவர்களில் இந்த இரு பிரிவினரையுமே ஒன்றுபடுத்த முடியாதவர்கள்…

பார்ப்பனர்கள் கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய காஞ்சிபுரம், அதை மாட்டுப் பொங்கல் அன்று மறுபடியும் உறுதி செய்துள்ளது.

காஞ்சி சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பவர்களை வடகலை வைஷ்ணவர்கள் என்றும், ஸ்ரீரங்கம் சம்பிரதாயத்தை கடைபிடிப்பவர்களை தென்கலை வைஷ்ணவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

வடகலையினரின் நாமம் அல்லது திருமண் காப்பில் மூக்கில் பாதம் வரைய மாட்டார்கள்.

தென்கலையினர் நாமத்தில் மூக்கின் மேல்பகுதி வரை பாதம் வரையப்பட்டு இருக்கும்.

நாமத்தை மகாவிஷ்ணுவின் பாதம் என்று வைணவர்கள் சொல்கிறார்கள்.

’ரத்தக் கண்ணீர்’ படத்தில் M.R.ராதா, “சரி. நீ போட்டிருப்பது மகாவிஷ்ணுவின் பாதம் என்றால், திருப்பதி பெருமாள் நெற்றியில் இருக்கும் நாமம் யார் பாதம்?” என்று கேட்டு, மகாவிஷ்ணு ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்ற கருத்தோட்டத்திற்கு மரண அடி கொடுப்பார்.

இந்த இரு பிரிவினரில் ஒரு பிரிவினர் ஆண்டாளையும், மதுரகவியையும் ஆழ்வார்களாக ஏற்றுக் கொள்வதில்லை.

நாமம் என்பது பெண்குறியின் குறியீடு என்று சொல்பவர்களும் உண்டு.

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய இந்த மோதல், கோவில் யானைக்கு நாமம் போடும் சர்ச்சையில் தொடங்கியது.

நேற்று முன்தினம் பார்ப்பனர்கள் பொறுக்கிகளைப் போல நடந்து கொண்டதைப் பார்த்தோம்.

“கொல்லாமல் விட மாட்டேன்”, “மானபங்கம் செய்யாமல் விட மாட்டேன்” என்பது சரளமாக பேசப்பட்ட வார்த்தைகள்; என்றாலும், “ஜட்டி போட்டுக்கொண்டு வந்து கவனித்துக் கொள்கிறேன்” என்று சிலர் சூளுரைப்பதும் கேட்கிறது.

அசிங்கம் பிடித்தவர்கள் ஆலயத்தை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இவர்களுக்கிடையே உள்ள பிரதான வேறுபாடே நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தை பாடும் முறை சம்பந்தமானதும், யார் அதை முதலில் பாடுவது என்பதும் தான்.

நாமம் பற்றி இவர்கள் இவ்வளவு பெரிய சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, ஏமாற்றுப் பேர்வழியை ”நாமம் போட்டு விட்டான்” என்றும், பறி கொடுத்த பொருள் ”கோவிந்தா ஆகி விட்டது” என்றும் சொல்லி சைவர்கள் மானபங்கப்படுத்தி விட்டார்கள்.

வைஷ்ணவர்களில் இந்த இரு பிரிவினரையுமே ஒன்றுபடுத்த முடியாதவர்கள், முற்றிலும் வேறு கடவுளர்களை வணங்குபவர்களை இணைத்து இந்துகள் என்று அழைப்பதை விட கேலிக்கூத்து உண்டா?

GNANABHRATHI CHINNASAMY