“கேஷ்லெஸ் எனும் யூஸ்லெஸ் திட்டத்தால் இந்த நாடு நாசமாய் போகும்!”

அதாவது, ப்ளாக் மணிய ஒழிச்சா அமெரிக்கா – ஐரோப்பா மாதிரி ஆகிருவோமாம்…

அட கிறுக்குப் பயலுகளா… அமெரிக்கா – ஐரோப்பாவுல பிச்சைக்காரனே இல்லைனு நெனைக்கிறீங்களா? அட அங்கல்லாம் நூத்துக்கு தொண்ணூறு பேரு பிச்சைக்காரப் பயலுகதான்…

அட என்ன ஆச்சரியமா இருக்கா…? அட ஆமாய்யா… அங்க உள்ள ஒரு இன்ஜீனியருடைய வாழ்க்கைத் தரம் இங்க சாதாரண மளிகைக் கடை வச்சிருக்கவனோட தரத்தைவிட கம்மிதான்…

நம்ம ஊருல, ஒரு கடைய வாடகைக்கு புடிச்சு, யாவாரத்தை ஆரம்பிச்சு, மூணாவது வருசத்துல அந்த கடையவே வெலைக்கி வாங்கி, அஞ்சாவது வருசத்துல சொந்த வீடு கட்டி, பத்தாவது வருசத்துல காரு கடைன்னு செட்லாகிருவானுக. மகளுக்கு அம்பது பவுன் நகை போட்டு, அம்பாதாயிரம் ரூவா பைக்கோட சீர்வச்சு கல்யாணம் முடிக்கிற அளவுக்கு டெவலப் ஆகிருவானுக…

காரணம் – சேமிப்பு. அதாவது வாயக் கட்டி, வயித்தக் கட்டி, மூத்தரத்தை அடக்கி, ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட போவாம கடையிலயே கெடந்து, சம்பாரிச்சு செட்லாகுறவன்தான் நம்மாளுக…

ஆனா, அமெரிக்கா – ஐரோப்பாவுல அவனுக்குன்னு தேவை எதுவும் கிடையாது. அவனுக்கு அந்த வாரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் சம்பாரிப்பான். பொண்டாட்டி புள்ளைகளுக்கெல்லாம் செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை. அவுக அவுகளே சம்பாரிச்சிக்கிட்டாத் தான் உண்டு. ஆனா ஒரு குடும்பமா ஒரே வீட்லதான் இருப்பானுக. ஓரளவுக்கு மேல இன்னொருத்தரை சார்ந்து வாழ மாட்டானுக. மத்தவனுக்கு சேத்தும் வைக்க மாட்டானுக..

ஆனா நம்ம பயலுக அக்கா தங்கச்சிக்கி செஞ்சு, மகன் மகளுக்கு செஞ்சு, மாமான் மச்சானோட கூத்தடிச்சு, கலாச்சாரத்தையும் விட்டுக் குடுக்காம, பெரிசா எதையும் சாதிக்காட்டியும் ஊரைக் கூட்டி பாடையில போறளவுக்கு சனத்தை சேத்துருவான்…

இப்பதான் இருபது வருசமா நம்மாளுக ஒழுங்கான வாழ்க்கையே வாழ ஆரம்பிச்சிருக்கானுக..

1990க்கு முன்னாடி ஊர்ல ஒரே ஒருத்தன் வீட்ல மட்டும்தான் டிவி இருக்கும். அதை பாக்குறதுக்கு அவன் வீட்டு ஜன்னல் ஓட்டையிலேருந்து தண்ணி போற ஓட்டை வரைக்கும் தேடி அது வழியால பாக்க வேண்டியதிருக்கும்..

வருசத்துக்கு ஒரு தடவை தான் புது துணி எடுக்க முடியும். வருசத்துக்கு ரெண்டு மூணு தடவைதான் சினிமாவுக்கே போவானுக. மாசத்துல ஒரு நாள்தான் இட்லி சுடுவானுக. வருசத்துல அஞ்சாறு தடவை தான் வெளளாட்டுக் கறியே கெடைக்கும்…

அட அதைவிட பக்கத்து டவுனுக்கே ஆயுசுக்கும் ரெண்டு மூணு தடவை தான் போயிருப்பானுக. சென்னையவே பாக்காம செத்த ஜெனரேசனே இருந்துச்சு…

ஆனா இப்ப கடுமையா உழைக்கிறான். பணத்தை நகையா, சொத்தா சேக்குறான். வாழ்க்கைத் தரத்தை எல்லோரும் போல அனுபவிக்கிறான்..

ஆனா அதுக்கு ஆப்புதான் இந்த கேஷ்லெஸ் எகானமி…

இனிமே நீ சேமிக்கக் கூடாது. ஆனா வீடு கட்டலாம். எப்படின்னா, பேங்க்ல கடன் வாங்கி கட்டிக்க…

கல்யாணம் பண்றியா… பேங்குக்கு வந்து லோன் போட்டு பண்ணு…

சொத்து வாங்குறியா… அது முடியாது. அதுக்கு நீ கார்ப்பரேட்டா இருந்தா தான் முடியும்…

தொழில் பண்றியா… அது அவ்வளவு சீக்கிரத்துல பண்ண முடியாது. அதுக்கு பதிலா ஃபேக்டரிக்கு வேலைக்கு வான்னு நெருக்கப் போறானுக…

அதாவது, 1990க்கு முன்னால இருந்தானுகளே… ஒரு குறிப்பிட்ட வீட்ல மட்டும் டிவி – கார்னு இருக்கும்ல… அது மாதிரி ஒரு ஜமீன்தாரிய முறை…

ஆக, நாட்டை ஐரோப்பாவா மாத்துறேன்னு கார்ப்பரேட் ஜமீன்தார்களை உருவாக்குற வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டானுக…

கார்டு வச்சு தேக்கிறதெல்லாம் கலாச்சார ரீதியா தங்களை குறுக்கிக்கொண்ட, செலவு செய்ய இயலாத, சுற்றத்தாரை அனுசரிக்காத,  மக்கள் தொகையில் நமது மாநிலங்கள் அளவே உடைய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்…

அதை விட்டுவிட்டு பத்து நாடுகளுக்குச் சமமான சேமிப்பை வைத்து வாழ்க்கை நடத்துகிற மக்களை  மீண்டும் பிச்சைக்காரத்தனத்திற்கு தள்ளும் விசயமே இந்த கேஷ்லெஸ் திட்டம்…

அப்புறம் எப்படி நாம ஐரோப்பா மாதிரி லஞசம் இல்லாத க்ளீன் சிட்டி ஆகுறதுன்னு கேக்குறீங்களா..? அங்கேயெல்லாம் ப்ளாக் மணி இல்லையா..? இருக்கு. அங்கயும் இங்க இருக்குறதைவிட இரு மடங்கு ப்ளாக் மார்க்கெட் இருக்கு…

அப்ப ஐரோப்பா ஆகணும்னா கேஷ்லெஸ் வேணாமா..???

அட லூசுப்பயலுகளா… அமெரிக்கா – ஐரோப்பாவுடைய நிலையே வேற. அங்கே ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால், ஒரு சாதாரண ரோடு கூட்டுறவன் மினிஸ்டர் மேல கேஸ் போட முடியும். சைக்கிள்ல போறவன் லம்பூர்ஹினி கார் வச்சிருக்கிறவனை நடுத்தெருவுக்கு கொண்டுவர முடியும். ஒரு பேஷண்ட் நினைச்சா டாக்டருடைய லைசென்ஸையே கேன்சல் பண்ண வைக்க முடியும். அந்த அளவுக்கு அவனுக்கு சட்டம் பாதுகாப்பு கொடுக்குது…

ஆக, சமூக நீதி சட்டங்களை கடுமையாக்கினாலே இந்த நாடு நம்மிடமுள்ள மனித வளத்திற்கு எங்கேயோ போய்விடும்.

நமக்குத் தேவை பொருளாதாரச் சமநிலை கிடையாது. நாம் அதை எப்போதோ அடைந்து விட்டோம். நமக்குத் தேவை சமூக நீதிச் சமநிலை…

அதை விட்டுட்டு கேஷ்லெஸ்ன்னு யூஸ்லெஸ்ஸான திட்டங்களால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போக வேண்டியதுதான்….

அப்புறமென்ன… கடைசியா அந்த வார்த்தைய போட்டு முடிச்சிருவோம்…

அட அதுதான்… அதேதான்யா….

ஜெய்ஹிந்த்….!

(Shared from Sornakumar R)

 

Read previous post:
0a1d
“போஸ்டரில் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்த வேண்டாம்!” – தீபா வேண்டுகோள்!

“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி

Close