இந்துத்துவத்துக்கு எதிரான போரில் பிராமண உயர்வுவாதம் உடைக்கப்பட வேண்டும்

பிராமண உயர்வுவாதம் பற்றி நான் பேசும் போதெல்லாம் பிராமணர்கள் என் பதிவில் வந்து அப்படி எதுவும் இல்லை என்று வழக்காடுவார்கள். இப்போது பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சர்ச்சையில் பேசிய பாஜக எம்எல்ஏ சிகே ராவுல்ஜி ‘அவர்கள் பிராமணர்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள்,’ என்று கருத்தளித்து இருக்கிறார். அவர்களை விடுதலை செய்த கமிட்டியில் அவரும் இருந்திருக்கிறார் என்பது ரொம்ப விசேஷம்.

இவர் பேசியது ஒன்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் பேசாமல் அதை மனதிலேயே இருத்திக் கொண்டிருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் பிராமணர்கள் மீது இருக்கும் பிரத்தியேக மரியாதை மற்றும் வணக்க நிலை குறித்து நான் பல முறை எழுதி இருக்கிறேன். இந்தி மாநிலங்கள் முழுவதும் இந்த சிந்தனை பரவி விரவிக் கிடக்கிறது. அதுவே இவரிடமும் வெளிப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இந்துத்துவத்துக்கு எதிரான போரில் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும்எனில் பிராமணர்கள் நல்லவர்கள், அறிவாளிகள், நாட்டுக்கு உழைப்பவர்கள், நாணயமானவர்கள் போன்ற பொய் பிம்பங்கள் உடைக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரக்கனின் வலுவைக் குறைப்பதில் இது முக்கிய தேவை.

சாதி உயர்வுவாதத்தை போற்றிப் புகழும் பாஜகவுக்கு கண்டனங்கள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்