‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகம் கவரும் நபர் ஓவியா!

‘களவாணி’ திரைப்படத்தைத் தவிர நடிகை ஓவியாவை நான் அதிகம் கவனித்ததில்லை. குறைந்த பட்சமாக புறத்தோற்றத்தில் கூட என்னை அவர் ஈர்த்ததில்லை. ஆனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் என்னை அதிகம் கவரும் நபராக அவரே இருக்கிறார்.

ஆரம்பக் கட்டத்தில் நிகழ்ந்த (“ஒரேயொரு பனானா கொடுங்க ப்ளீஸ்”, “நீங்க ஷட்அப் பண்ணுங்க”) சில சிறிய சறுக்கல்களைத் தவிர மற்ற பெரும்பாலான சமயங்களில் இந்த நிகழ்ச்சியின் மையம் என்ன என்பதும் அவ்வகையான உணர்வுச் சுரண்டல்களுக்கு தான் பலியாகக் கூடாது என்கிற கவனமும் பிரக்ஞையும் அவரிடம் இருக்கிறது.

அது போன்ற தற்காலிக தீவிரங்களை, சண்டைகளை இயல்பாக கடக்க நினைக்கிறார். அதையே பாதிக்கப்பட்டவர்களுக்கும் உபதேசிக்கிறார். ஆனால் அழுது தீர்ப்பவர்களை விட தங்கள் உணர்வுகளின் மீது கவனமாக இருப்பவர்கள் ஒருவகையில் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது.

சிக்கலான தருணங்களை மிக கூலாக கையாளும் ஓவியாவின் நேர்த்தியைக் கவனிப்பது சுவாரசியமாக உள்ளது. இவரை அழ வைப்பதும், வெளியேற்ற வைப்பதும்தான் பிக்பாஸின் உச்சபட்ச சாதனைகளுள் ஒன்றாக இருக்கும்.

SURESH KANNAN

0