அரவிந்த்சாமி – அமலாபால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’: டிசம்பரில் வெளியாகிறது!

கேரளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மலையாளப் படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை சித்திக் இயக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும், நாயகன் அரவிந்த்சாமி, நாயகி அமலாபால் ஆகியோரின் கதாபாத்திரங்களிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார்.

ஆக்ஷன் மற்றும் காதலை மையமாகக் கொண்ட ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, குடும்ப ஆடியன்ஸூக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை மிக விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. படம் அடுத்த (டிசம்பர்) மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பு : எம்.ஹர்சினி

இயக்கம்  : சித்திக்

வசனம் : ரமேஷ் கண்ணா

இசை   : அம்ரேஷ்

ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்

படத்தொகுப்பு : கே.ஆர்.கௌரி சங்கர்

தயாரிப்பு வடிவமைப்பு :  மணி சுசித்ரா

நிர்வாக தயாரிப்பு  : விமல்.ஜி

கலை : ஜோசப் நெல்லிகன்

சண்டை பயிற்சி:  பெப்சி விஜயன்

நடனம் : பிருந்தா

ஊடகத் தொடர்பு : ரியாஸ் அகமது