இந்த ஆண்டின் சிறந்த பாடல் “ஆலங் குருவிகளா… எங்க வாசல் வருவிகளா…” – வீடியோ

இந்த ஆண்டு வெளியான பாடல்களில், என் இதயத்தை என்னவோ செய்த சிறந்த பாடல்கள் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் பாடல் “ஆலங் குருவிகளா… எங்க வாசல் வருவிகளா…”

சின்னச்சின்ன வார்த்தைகளில், எளிமையான வரிகளில் உன்னதமான பல்லுயிர்நேயக் கருத்துக்களை விதைத்திருக்கும் பாடலாசிரியர் மணியமுதன், நம் நியூரான்களுக்கு இதமளிக்கும் வகையில் இசையமைத்திருக்கும் டி.இமான், தேனில் குழைத்த இனிய குரலில் பாடியிருக்கும் சித்ஸ்ரீராம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இப்பாடல் இடம் பெற்றிருக்கும் ‘பக்ரீத்’ திரைப்படம் வருகிற (ஆகஸ்டு) 23ஆம் தேதி திரைக்கு வருகிறது. ”மனிதம் வழியே உயிர்மை கொண்டாடும் படம்” என கூறப்படும் இப்படத்தில் விக்ராந்த், வசுந்தரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜகதீசன் சுப்பு எழுதி இயக்கியிருக்கிறார். எம்.எஸ்.முருகராஜ் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

பாடலோடு படத்தையும் திரையில் பார்க்க பேராவல்!

ஆசிரியர்

ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்

Read previous post:
k1
“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது!” – யுகபாரதி

திரைப்படத் துறைக்கான ஒன்றிய அரசின் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. பா.இரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’, ராம் இயக்கிய ‘பேரன்பு’, வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ போன்ற தரமான நல்ல

Close