அரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்கள்!

கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை சாப்ளின் எடுத்திருப்பார்.

கார் ரேஸ் நடக்கும். அதில் சிகரெட் பிடித்தபடி, அவனுக்கும் ரேஸுக்கும் சம்பந்தமில்லாதது போன்ற அலட்சியத்துடன் ஒருவன் சுற்றிக் கொண்டிருப்பான். சட்டென அவன் கார் ரேஸ்ஸை ஒளிப்பதிவு செய்ய வந்திருக்கும் ஒரு கேமரா குழுவை பார்த்துவிடுவான். அவ்வளவுதான். கேமராவில் தெரிவது போலவே நடப்பான். முன்னாடி நிற்பான். ஸ்டைலாக கேமராவை நோக்கி நடந்து வருவான். கேமராவில் தான் வந்திட வேண்டும் என்ற முனைப்புடன் பற்பல வழிகள் கடைப்பிடிப்பான். ரேஸ்ஸை மறைப்பதால் கேமராக்காரர் அவனிடம் சொல்லி பார்ப்பார். உதைத்துப் பார்ப்பார். கேமராவையே வேறொரு இடத்துக்கு சென்று வைத்து பார்ப்பார். விடாமல் அவன் தேடி கேமராவில் தன்னை காண்பிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பான்.

இன்றைக்கும் ஏதோவொரு நியூஸ் தொலைக்காட்சியை வைத்து பாருங்கள். ‘தீவிரமான போராட்டம் நடக்கிறது’ என்பது போன்ற செய்தியில் காண்பிக்கப்படும் கூட்டத்தில் ஒருவனாவது கேமராவை நேராக பார்த்து, புன்னகைத்து, தலை கோதி, தான் தெரிய வேண்டும் என்கிற முனைப்போடு நின்று கொண்டிருப்பான்.

Attention Seeking!

கவன ஈர்ப்பு ஒரு மனிதக்கூறு. குழந்தைகளிடம் அதிகம் காணலாம். நாளடைவில் அத்தகைய கவன ஈர்ப்பு பெரும் அபத்தம் என்பதை வாழ்க்கை கற்றுக் கொடுத்து விடும். அதனால் கவன ஈர்ப்பை பெருமளவுக்கு குறைப்போம். ஆயினும் அலுவலகம், முக்கிய நிகழ்வு போன்றவற்றில் நமக்கான கவன ஈர்ப்பு முனைப்பு, அருவருப்பாக வெளிப்படுவதை பார்க்க முடியும்.

தற்கால நவதாராளமய சிந்தனை, கவன ஈர்ப்பை தனிமனிதவாதம் என சொல்லி போற்றி வளர்க்கும் சிந்தனை. மனிதனின் அருவருப்பான ஒரு கூறை போற்றி பாதுகாக்கும் ஒரு பொருளியல் இருந்தால் மனிதனும், மனிதச்சிந்தனையும் அதை நோக்கித்தானே பாய்ந்து செல்லும்?

அருவருப்புகளை அழித்துவிட்டு, அவற்றை நிர்ப்பந்திக்கும் சிந்தைக்கு நேரெதிரில் சென்று நிற்கும் பொருளியல் மற்றும் சிந்தனை முறைக்குத்தான் கூட்டம் குறைவு. ஏனெனில் அம்முறை நிர்ப்பந்திப்பது சிந்தனை ஒழுக்கமும் மனிதத்தின் அடுத்தக்கட்ட நகர்வும். எப்போதுமே அந்த முனையில் ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் இருப்பதுண்டு. மறுமுனையில்தான் கூட்டம் அள்ளும்.

கவன ஈர்ப்பு அரசியலுக்கும் வருவதே தற்கால அரசியல் போக்காக இருக்கிறது. சித்தாந்த பேதமின்றி எல்லாவற்றிலும் கவன ஈர்ப்பு, தனிமனிதவாதம் போன்ற நவதாராளமயக் கூறுகள் தலைவிரித்து ஆடுகின்றன.

தன்முனைப்பின்றி அரசியல் செய்வதற்கு தெளிவு வேண்டும். இன்றைய நவதாராளமய பொருளியல், மிக சுலபமாக சித்தாந்த கடத்தல் செய்யவல்லது. நமக்கான சித்தாந்தம் கொண்டவர் போல், தோற்றமளிக்கும் பல அமைப்புகள் தெரியலாம். ஆனால் பெரும்பாலானவை are for just sheer individualism and attention seeking.

ஏதோவொரு வகையில் கவனத்தை குவிக்க வேண்டும். பின் அதை கொண்டு ஒரு சலசலப்பை உருவாக்க வேண்டும். அதன் வழியாக ஓர் புரட்சி அடையாளத்தை உருவாக்க வேண்டும். ஓர் உயரத்துக்கு சென்றிட எதையேனும் செய்து, யாரையேனும் பழி கூறி, தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

ப்பா.. எத்தனை கஷ்டம் ஒரு all time புரட்சிக்காரராய் திகழ வேண்டிய அவசியம் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்வதென்பது?

‘The ‘crude individualism’ that adorns our era is perhaps nowhere as blatant as in the organization of sexual relationships. We individualists have had our emotions spoiled in the persistent cult of the ‘ego’. We imagine that we can reach the happiness of being in a state of ‘great love’ with those near to us, without having to ‘give up’ anything of ourselves.’

இப்படி சொன்னது நான் இல்லையாக்கும். நூறு வருடத்துக்கு முன் Alexandra Kollontoi சொல்லியிருக்கிறார். நல்லவேளை இப்போது இல்லை. இருந்திருந்தால் அரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்களை பார்த்து நொந்து போயிருப்பார்.

RAJASANGEETHAN