விக்ரம் நடிக்கும் 61-வது படம்: ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்குகிறார்

நடிகர் விக்ரம் தற்போது ’கோப்ரா’, ’மகான்’, ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். இவற்றில் ’மகான்’, ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து, படப்பிடிப்புக்குப் பிந்தைய ‘போஸ்ட் புரொடக்சன்’ பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது விக்ரம் நடிக்கும் 61-வது படம் ஆகும். இதை பா.ரஞ்சித் இயக்குகிறார். இவர் ‘அட்டகத்தி’ மூலம் அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ மூலம் கவனம் ஈர்த்து, ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் என்பதும், சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்பதும், தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை ’ஸ்டூடியோ க்ரீன்’ கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் 23-வது படம் இது.

இந்தப் படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read previous post:
0a1a
”சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு கதை”: ‘ரிபெல்’ படம் பற்றி நாயகன் ஜி.வி.பிரகாஷ்

STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில்  C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில்,

Close