நடிகை சமந்தா மறுமணம்: இயக்குநர் ராஜ் நிடிமோருவை மணந்தார்!
பிரபல நடிகை சமந்தா மறுமணம் செய்து கொண்டதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருப்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் நடந்த திருமணத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜ் நிடிமோரு இயக்கிய ’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் நடித்தார். அந்த சீரிஸில் சமந்தா கவர்ச்சியாக நடித்ததால் தான் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே பிரச்சனை வந்ததாக அந்த நேரத்தில் செய்திகள் வெளியாயின.
பிறகு நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, ’ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோருவை சமந்தா காதலிக்கத் தொடங்கியதாக தெரிகிறது. இது குறித்து பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், அது சம்பந்தமாக சமந்தாவோ, ராஜ் நிடிமோருவோ எந்த சந்தர்ப்பத்திலும் விளக்கம் கொடுக்கவில்லை.
இந்நிலையில், சமந்தா – ராஜ் நிடிமோரு திருமணம் இன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பதிவிட்டு, ’இன்றைய நாள் 1-12-2025’ என்று குறிப்பிட்டு, ’இன்று என்னுடைய திருமணம் நடைபெற்றது. இனிய புதிய தொடக்கம்’ என்பது போல போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சமந்தாவைப் போல ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். சமந்தாவுக்கு இப்போது 38 வயதாகிறது. ராஜ் நிடிமோருக்கு 46 வயது ஆகிறது.
