எதிர்த்து அழிவதா? எதிர்க்காமல் அழிவதா? அகதிகளாக புறம் போவதா?

தூத்துக்குடியிலும்
சேலத்திலும்
தமிழ்நாடெங்கும்….
இன அழிப்பையும்
நில அழிப்பையும்
மக்களை தங்களின் பூர்வீக நிலத்தில் இருந்து புறம் போக்கும் செயலையும்
செய்வது……….

காவல்துறை இல்லை
அதிகாரிகள் இல்லை
பார்ப்பன நீதிமன்றங்கள் இல்லை
எடப்பாடி இல்லை
மோடி இல்லை
மார்வாரி இல்லை
திராவிடம் இல்லை
தமிழ் தேசியம் இல்லை
RSS இல்லை
இடதுசாரிகள் இல்லை

சர்வதேச பெருவணிகம்.

மேலே உள்ளதுகள் எல்லாம் அதனிடம் பொறுக்கி தின்பவைகள்.

உன் தேசம் சர்வதேச பெருவணிகர்களின் சீடர்களால்
கூலிக்கு கட்டப்பட்டது.

இந்த தேசம்…….
உன் மதம்
உன் இனம்
உன் சாதி
உன் மொழி
உன் பண்பாடு
உன் உணவு
உன் கல்வி
உன் ஜனனம்
உன் மரணம்
உன் கலவி
வரை நீண்டு உன் உரிமைகளை
ஏற்கனவே பறித்துவிட்டது

புலம் பெயர்ந்து வந்தடைந்த
உன் நிலமும் இனி உனக்கு சொந்தமில்லை என்று நேற்று சொல்லிவிட்டது.

அதை எதிர்ப்பதால் நீ தேசவிரோதி
சட்டத்தின் பாதுகாப்பு உனக்கு கிடையாது.
உன் மேல் நடத்தப்படுவது
அரசு அராஜகம் அல்ல.

போர்.
தமிழனே
போர்.

போரில் மூன்று நடைமுறைகள்தான் உள்ளன.

1. எதிர்த்து அழிவது
2. எதிர்க்காமல் அழிவது
3. அகதிகளாக புறம் போவது.

எது சாலச்சிறந்தது என்று
வழக்கம்போல்
தொலைக்காட்சியில்
பட்டிமன்றம் நடத்தி
தெரிந்துகொள்.

வரலாறு நெடுகிலும்
போரில் தோற்று
புறம் ஏகி
புறம்போக்காகவே
வாழும்
தமிழனே….

இனி நீ புறம் போக பூமியில்
நிலம் இல்லை.
இன்று நீ வாழும் நிலமே உன் இறுதி நிலம்.

எதிர்க்காமல் நீ அழிந்தது
வரலாற்றில் அதிகம்.

எதிர்த்து நீ அழிந்ததும்
வரலாற்றில் அதிகம்

உன்னை போல் மானுட வரலாற்றில் தொடர்ந்து கேவலமாக அழிந்த இனம் வேறு இல்லை.
ஏன் எனில் நீ இனமே இல்லை
நீ ஒரு சாதிய நெல்லி மூட்டை.

நீ மீண்டும் சாதியாக திரள்வாய்.
மூட சரித்திர தவறை மீண்டும் செய்வாய் என……
சர்வதேச பெருவணிகத்துக்கு ஏற்கனவே தெரியும்.

காலக்கணிதத்தை பலிதமாக்குவாயா?
பலியாக்குவாயா?

SRINIVASA RAGAVAN