தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் “வா வாத்தி…” பாடல் – வீடியோ

நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் ‘வாத்தி’ என்கிற பெயரில் இருமொழி படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்துக்காக பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் “வா வாத்தி…” என்ற பாடலைப் பாடியிருக்கிறார். இப்பாடலின் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.