ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவி, 5,090 ஒன்றியக் கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கு நட்த்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02-01-2020) காலை 8 மணிக்குத் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் இறுதியாக அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
மொத்த மாவட்டக் கவுன்சிலர் இடங்கள் 515. இதில் திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் என இரண்டு பதவியிடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 513 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதன்படி, கட்சிகளுக்கு கிடைத்துள்ள மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களின் எண்ணிக்கை வருமாறு:
திமுக கூட்டணி:-
திமுக – 243
காங்கிரஸ் – 15
இந்திய கம்யூ. – 07
மார்க்சிஸ்ட் கம்யூ – 02
மொத்தம் – 267
அதிமுக கூட்டணி
அதிமுக – 214
பாமக – 16
பாஜக – 07
தே.மு.தி.க – 03
தமாகா -03
மொத்தம் – 243
இதரவை – 03
ஒன்றியக் கவுன்சிலர் இடங்கள் மொத்தம் 5,090 ஆகும். இதில் 3 இடங்களைத் தவிர்த்து 5,087 இடங்களுக்கான முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதன்படி, கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களின் எண்ணிக்கை வருமாறு:
திமுக கூட்டணி:-
திமுக – 2100
காங்கிரஸ் – 132
இந்திய கம்யூ. – 62
மார்க்சிஸ்ட் கம்யூ – 33
மொத்தம் – 2327
அதிமுக கூட்டணி:-
அதிமுக – 1781
பாமக – 224
பாஜக – 85
தே.மு.தி.க – 99
தமாகா – 23
மொத்தம் – 2212
மற்ற கட்சிகள்:-
அமமுக – 94
நாதக – 01
இதரவை – 453
மொத்தம் – 548