கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு ஜன. 28-ல் இடைத்தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற (ஜனவரி) 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இண்டிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்காக இண்டிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணை வருமாறு:

ஜனவரி 3 (வியாழன்): வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

ஜனவரி 10 (வியாழன்): வேட்புமனுத் தாக்கல் முடிவு

ஜனவரி 11 (வெள்ளி): வேட்பு மனு பரிசீலனை

ஜனவரி 14 (திங்கள்): வேட்புமனு திரும்ப பெறுதல்

ஜனவரி 28 (திங்கள்): வாக்குப்பதிவு

ஜனவரி 31 (வியாழன்): வாக்கு எண்ணிக்கை

இந்த இடைத்தேர்தலில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றாலும், முக்கிய போட்டி தி.மு.க., அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களிடையே தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
0a1a
அஜித் குமாரின் ‘விஸ்வாசம்’ – ட்ரெய்லர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

Close