சிவி 2 – விமர்சனம்

நடிப்பு: சந்தோஷ், ஸ்வாதி, சாம்ஸ், தேஜ் சரண்ராஜ் மற்றும் பலர்

 இயக்கம்: கே.ஆர்.செந்தில்நாதன்

இசை: பைசல்

ஒளிப்பதிவு : பி.எல்.சஞ்சய்

மக்கள் தொடர்பு: குமரேசன்

சிரிப்பு பேய் இல்லாத சீரியஸான பேய் படம் ‘சிவி 2’.

காட்டுக்கு நடுவில் இருக்கிறது செயல்படாத ஒரு மருத்துவமனை. அங்கு பேய்கள் நடமாட்டம் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அந்த மருத்துவமனைக்குள் போய் பேய் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்தால் ஒரு பெரிய தொகையை பரிசாக தருவதாக யூடியூப் சேனல் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் ஆசை காட்டுகிறது. அந்த ஊழியர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு பேய்கள் நடமாடும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் கதை.

சேனலில் பணிபுரியும் சில ஆண்களையும், பெண்களையும் கொண்ட அந்த குழுவினர் மருத்துவமனையில் ஒவ்வொரு மாடியாக பேய் இருக்கிறதா, இல்லையா என்பதை சோதனை செய்யும்போது, விசித்திரமான சத்தங்கள் மற்றும் கருப்பு உருவங்களின் பாய்ச்சல்கள் படம் பார்ப்பவர்களை பயமுறுத்துவது நிஜம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அத்தனை பேரையும் கொன்று குவித்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட நந்தினி என்ற பெண்ணின் ஆவிதான் அங்கு நடமாடும் தலைமை பேய். அது சேனல் குழுவினரை மிரட்டும் காட்சிகள் திகிலின் உச்சம். நந்தினி பேயை பார்த்த பயத்தில் கதாநாயகிகள் இரண்டு பேரும் காட்டுக்குள் தலை தெறிக்க ஓடும் காட்சியில் படம் பார்ப்பவர்கள் உறைந்து போகிறார்கள்.

சந்தோஷ், சாம்ஸ் ஆகிய 2 தெரிந்த முகங்களுடன் முழுக்க முழுக்க புதுமுங்கள் நடித்து இருக்கிறார்கள். பி.எல்.சஞ்சய்யின் ஒளிப்பதிவு திகிலான காட்சிகளுக்கு மேலும் திகில் கூட்டுகிறது. இசையமைப்பாளர் பைசல் பின்னணி இசை மூலம் பயமுறுத்தி இருக்கிறார்.

கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கியிருக்கிறார். கதை புதுசு. களம் பழசு. திகில் படங்களில் ஏற்கனவே பார்த்த காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருப்பது ஆறுதல். உச்சகட்ட காட்சியை இன்னும் தெளிவாக காட்டியிருக்கலாம்.

‘சிவி 2’ – திகில் பட ரசிகர்களுக்கு விருந்து.

Read previous post:
0a1c
குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளை சேர்ந்த 126 எம்எல்ஏ.க்கள், 17 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர்!

கடந்த 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தேர்தலில் வாக்களித்தனர். டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர்

Close