விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம்.

தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டியின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டிக்கு 6-வது படமாகும்.

நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். மேலும், நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீரஞ்ஜனி, மைம்  கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின்  இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து வெளியான  அனைத்து  பாடல்களும்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் இப்படத்தின் ட்ரைலர் & டீசர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்படம் அக்டோபரில் திரைக்கு வர இருக்கிறது .

தொழில்நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு   – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு     – பிரவீன் K.L

சண்டை  பயிற்சி  – அனல்  அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன், குமரன் .

நடனம் – ராஜு சுந்தரம், செரிஃப் ,சாண்டி

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே.அஹமது.