ரஜினி – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு: ஏப்ரல் 10-ல் மும்பையில் தொடங்குகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கு இசையமைத்த அனிருத், இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் இதுவரை ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி, மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக்களமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read previous post:
0a1a
அமமுக.வுக்கு குக்கர் அல்லாத ஒரு பொது சின்னம் வழஙக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அம்முகவின் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், வரும் தேர்தலை கருத்தில் கொண்டு அமமுகவுக்கு ஒரு பொதுச்

Close