நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டின் (டிஇஆர்ஐ) முன்னாள் தலைவருமான ஆர்.கே.பச்சோரி (வயது 79) இன்று (13-02-2020) மரணமடைந்தார்.

இதய நோயால் நீண்டகாலமாக அவதிப்பட்டுவந்த பச்சோரி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பச்சோரி தனது மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வந்தார்.

முன்னதாக, பச்சோரி உடல்நிலை மோசமானதை அடுத்து டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே பச்சோரியின் மறைவுக்கு ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ல் பருவநிலை மாற்ற விவகாரத்தில் சர்வதேச அரசுகளுக்கான ஐ.நா. குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தபோது பச்சோரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 2001-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும், 2008-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, சக பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பச்சோரி ராஜிநாமா செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான ‘hindustantimes.com’ செய்தி வருமாறு:-

R K Pachauri, a former chief of The Energy and Resources Institute, passed away on Thursday after a prolonged cardiac ailment, TERI Director General Ajay Mathur said. Pachauri was 79.

“It is with immense sadness that we announce the passing away of R K Pachauri, the founder Director of TERI. The entire TERI family stands with the family of Dr Pachauri in this hour of grief,” Mathur said in a statement issued by the TERI.

Pachauri was the chairman of Intergovernmental Panel on Climate Change (IPCC) between 2002 and 2015. The panel was awarded with the Nobel Peace prize during Pachauri’s tenure in 2007.

“TERI is what it is because of Dr Pachauri’s untiring perseverance. He played a pivotal role in growing this institution, and making it a premier global organisation in the sustainability space,” said Mathur, who succeeded Pachauri at TERI in 2015.

In the statement issued by TERI, its Chairman Nitin Desai hailed Pachauri’s contribution to global sustainable development as “unparalleled”.

Pachauri was admitted to Escorts Heart Institute in the national capital where he underwent open heart surgery and was put on life support on Tuesday, sources said.

In 2015, Pachauri was accused of allegedly sexually harassing a woman colleague after which he quit the post.

Born on August 20, 1940 in Nainital, Pachauri studied at Lucknow’s La Martiniere College and at the Indian Railways Institute of Mechanical and Electrical Engineering in Jamalpur, Bihar. He later went to the United States and studied Industrial Engineering and also obtained a PhD degree with co-majors in Industrial Engineering and Economics.

He started his career with the Indian Railways Varanasi.

Pachauri was a strict vegetarian.

Pachauri was one of the most respected voices on climate change and had been at the forefront of the drive to convince global economies to pledge to ambitious targets to limit carbon emissions in time to avoid a climate tipping point. It was during his leadership that IPCC was awarded the Nobel Peace Prize along with Al Gore for their efforts to “build up and disseminate greater knowledge about man-made climate change, and to lay the foundations for the measures that are needed to counteract such change.”

 

Read previous post:
m4
“தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது!” – நடிகர் ஜீவா

டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் ’மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன்முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும்

Close