இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” இம்மாதம் 31-ம் தேதி வெளியாகிறது

0a1bஇயக்குனர் பா.இரஞ்சித் ’சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார்.

காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா, ஹரி, ஷபீர், வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. இம்மாதம் (ஆகஸ்ட்) 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கிஷோர் குமார், இசை – டென்மா, எடிட்டிங் – செல்வா RK, கலை –  ரகு, நடனம் – சாண்டி, சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்.

Read previous post:
0a1b
ஆடி தள்ளுபடி, அடுத்தடுத்த புது திரைப்படங்கள் அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்!

தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக  வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.  சிறந்த

Close