அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே அமோக வெற்றி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூரை தோற்கடித்துள்ளார்.

வாக்குகள் விவரம்:

மொத்தம் பதிவான வாக்குகள் – 9385

கார்கே பெற்ற வாக்குகள்            – 7897

சசிதரூர் பெற்ற வாக்குகள்          – 1072

செல்லாதவை                                      – 416

அகில இந்திய காங்கிரசின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.