தனுஷின் ‘கேப்டன் மில்லர்’  திரைப்படத்தின் “கொரனாரு” பாடல் வீடியோ வெளியீடு!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்,  சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்த்து. அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது. இதனை தொடர்ந்து தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பின்னர் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடலும் வெளியாகியது.

ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ள நிலையில்,  படத்தின் முன் வெளியீட்டு விழா (Pre release event)  நாளை (ஜனவரி 3) மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் 3-வது பாடலான “கொரனாரு” பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உமாதேவி எழுத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் பாடியுள்ளனர்.