கிரண் பேடியின் உத்தரவு கோவில் யானையை வதைக்கவே உதவும்!

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டமும் நடத்தினார்கள்.

இந்நிலையில்,  புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை கான்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் காலில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் சீர்கெட்டு இருப்பதாகவும், எனவே, அந்த யானையை காட்டில் விட வேண்டும் என்றும் பீட்டா அமைப்பினர் கிரண்பேடிக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிரண்பேடி, யானையை காட்டில் கொண்டுபோய் விட இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக GNANABHARATHI CHINNASAMY பதிவு:-

கிரண்பேடி பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானையை காட்டில் கொண்டு போய் விட்டுவிட உத்தரவு போட்டு விட்டார்.

யானைக் கூட்டத்தில் இருந்து பிரித்து கடத்தி வந்து பழக்கப்படுத்தப்பட்ட கோயில் யானை, தான் ஒரு யானை என்பதையே மறந்துவிட்ட கோயில் யானை, இப்போது கடவுளும் கிரண்பேடியும் கைவிட்டு விட்டதால் சர்வதேச அநாதையாக்கப்பட்டு விட்டது.

மனிதவாடை வீசும் இந்த யானையை எந்த யானைக் கூட்டமும் தன் குரூப்பில் சேர்த்துக் கொள்ளாது. பிச்சை எடுக்க மட்டுமே தெரிந்த யானையை ஏதாவது ஒரு கொம்பன் யானையின் முழநீளத் தந்தம் கொன்று விடும் என்பதிலும் சந்தேகமில்லை.

சபாஷ், கிரண்பேடி!

மோடியிடம் சொல்லி இந்தியா முழுக்க உள்ள கோயில் யானைகளை காட்டிற்கு அனுப்பி வைத்துவிட உத்தரவு போடச் சொல்லுங்கள். இந்தக் குடிஅரசு தினத்தோடு குதிரைப் படையையும் ஒட்டகப் படையையும் மோப்பநாய் பிரிவையும் கலைத்துவிட்டு எல்லாவற்றையும் பாலைவனப் பக்கம் துரத்தி விடச் சொல்லுங்கள்.

நாங்கள் எல்லாம் பொன்னார் தான் மேல்மாடியைச் சுத்தமாக காலியாக வைத்துள்ள மோடியின் ஆள் என்று நினைத்தோம்.அந்த விருதினைப் பெற நீங்கள் செய்யும் முயற்சியைப் பார்க்கும்போது அவரால் உங்களோடு அந்த விருதுக்குப் போட்டியிட முடியாது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

KEEP IT UP MADAM.

 

Read previous post:
0
நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்!

நேமி சந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டோரா'. இப்படத்தில்

Close