“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்  உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இப்படத்தின் டீசர் மற்றும் “கண்டா வரச்சொல்லுங்க…”, “மஞ்சனத்தி புராணம்” உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்திற்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புக்கு மத்தியில்  படம் நாளை (ஏப்ரல் 9ஆம் தேதி) உலகெங்கும் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், அதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டுப்பாடுகளில், இனி திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதும் ஒன்று. இதனால் ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் ஐயம் எழுந்தது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, “கர்ணன்’ திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், ’கர்ணன்’ திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1e
தமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக!

நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் துல்லியமாக மொத்தம் 72.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் - தொகுதி

Close