இயக்குனர் பாக்யராஜை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நமீதாவின் கணவர் வீரா!

அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ் வழங்க, அதிரடி அரசு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கபடி வீரன்’.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா, தொழிலதிபர் தமிழ்செல்வன், நடிகர்  பானுச்சந்தர், அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன்  திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ், ராதாரவி, ஜாகுவார் தங்கம், நமீதா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

0a1b

இவ்விழாவில் கலந்துகொண்டு காம-நெடி கலந்து காமெடியாக பேசிய இயக்குநர் நடிகர்  கே.பாக்யராஜ், “நான் இப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன். இங்கு வந்தபோது அதிர்ச்சி இல்லை. மேடையில் கூப்பிடுவதற்கு முன் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில்லை. நமீதா வந்தபோது கூட அதிர்ச்சி இல்லை. மேலே வந்தபோது கூட அதிர்ச்சி இல்லை , ஆனால் என் அருகே நமீதாவின் மச்சான்ஸ், அதாங்க நமீதாவின் வீட்டுக்காரர் வீரா, மேடையில் என் அருகில் அமர்ந்தபோது, பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன். காரணம், என்னவென்று யாருக்காவது தெரியுமா? வேறொன்றுமில்லை,  நமீதாவின் மச்சான்ஸ் வீரா., என்னிடம் இந்த மேடையில் அருகில் அமர்ந்து பேசும்போது,  “மலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கிறேன். அடுத்த மாசம் தான் கோயிலுக்கு போறேன்” என்றபோது எனக்குஅதிர்ச்சி ஆகிவிட்டது .எப்படி ? இப்படி ? கஷ்டமில்லே ..? முடியாதே, ரொம்ப கஷ்டமாச்சே!  இப்படி ,ஒரு அழகிய மனைவியை அருகில் வைத்துக்கொண்டு நாள் கணக்கில் விரதமிருப்பது ரொம்ப கஷ்டமாச்சே … முடியாதே ….என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த யோசனையே ,பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது. அதனால இங்கு , வந்ததிலிருந்து வீராவை ஆச்சர்யமாக பார்த்து வருகிறேன்… அந்த அதிர்ச்சி ஆச்சர்யத்தில் இருந்து மெல்லத் தான் மீள முடியும் .எனவே வீராவிற்கு முதல்ல என் வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன்.

இதே சீக்குவன்ஸ் என் ஒரு படத்துலக் கூட இருக்கும். நமீதா மாதிரி ஒரு பெண்மணி அந்தப் படத்துல சும்மா தேரு மாதிரி வருவாங்க  வயசான ரெண்டு டிக்கெட்டுங்க அந்தம்மா கிராஸ் ஆகற வரைக்கும் அப்படியே பார்த்துட்டு இருப்பாங்க, அப்புறம் , அவங்க குள்ளாற , “எப்படிய்யா ? இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி, விட்டுட்டுட்டு அவன் துபாய்ல போய் கிடக்குறான் ? எப்படிய்யா அவனால முடியுது ? நம்மளை எல்லாம் பக்கத்து ஊருல வேலைக்காக கொண்டு போய்விட்டாக் கூட மதியம் சாப்பாட்டிற்கோ ., இல்லை இராத்திரி சாப்பாட்டிற்கோ வீட்டிற்கு வந்துடுவோம் … அவன் எப்படி வருஷ கணக்கில துபாய்ல போய் கிடக்குறான் ?” என தங்களுக்குள் ஆராய்ச்சியாக பேசிப் பாங்க … அது அந்தப் படத்து சீனுக்காக வச்சேன். இங்க இவரு மாலை போட்டு வந்து உட்கார்ந்து இருக்கிறதை பார்த்ததும் எனக்கு அந்த சீன் ஞாபகம் மைன்டுக்கு வந்துடுச்சி” என்றார் பாக்யராஜ்.