300 திரை யரங்குகளில் வெளியான ‘கூர்கா’: டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு!
’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், கதையின் நாயகனாக யோகி பாபு நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.
இன்று (12ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப் பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரமாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’, யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இன்று காலை சிறப்பு காட்சியியே ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு சிறப்பான ஓபனிங் காட்சிகளாகவும் அமைந்திருப்பதால், யோகி பாபு டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடிப்பது உறுதி என்கின்றனர்.
படத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடையச் செய்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூர்கா’ தற்போது வசூலிலும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று தமிழ் திரையுலகில் பேசப்படுகிறது.