‘பிக்பாஸ்-2’ வீட்டில் நடிகை ஓவியா! பெண் போட்டியாளர்கள் அப்செட்!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சி இன்று (17-06-2018) ஆரம்பமானது. இதை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், 9 பெண் போட்டியாளர்களையும், 7 ஆண் போட்டியாளர்களையும் இன்று அறிமுகப்படுத்தி, பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். ‘பிக் பாஸ் -2’ல் பங்கேற்கும் 16 போட்டியாளர்கள் விவரம்:

0a1c

பெண் போட்டியாளர்கள்

’துருவங்கள் பதினாறு’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த்,

’மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ’குஷி’, ‘சாக்லேட்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள மும்தாஜ்,

‘திருதிரு துறுதுறு’, ‘அவன் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஜனனி அய்யர்,

’மெட்ராஸ்’, ‘கபாலி’ போன்ற படங்களில் நடித்துள்ள ரித்விகா,

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா,

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் வழி பேத்தியும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான என்.எஸ்.கே.ரம்யா,

பிரபல பத்திரிகையாளர் சாவியின் பேத்தியும், ரேடியோ ஜாக்கியுமான வைஷ்ணவி,

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியும், தொலைக்காட்சித் தொடர் நடிகையுமான மமதி சாரி,

கருத்துவேறுபாடு காரணமாக நடிகர் தாடி பாலாஜியைவிட்டு பிரிந்து வாழும் அவரது மனைவியும், நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினரும், சமூக சேவையில் நாட்டம் உள்ளவருமான நித்யா.

ஆண் போட்டியாளர்கள்

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம்,

‘மங்காத்தா’, ‘ஜில்லா’,’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஆகிய படங்களில் நடித்த உறுதுணை நடிகர் மஹத்,

‘பொல்லாதவன்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரங்கூன்’, ‘மரகத நாணயம்’ போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் டேனியல் அன்னி போப்,

’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’மூடர்கூடம்’, ’ரெளத்திரம்’, ’மெட்ரோ’, ’பஞ்சு மிட்டாய்’ போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் சென்ராயன்,

நடிகை கமலா காமேஷின் பேரனும், நடிகர் ரியாஸ்கான் – நடிகை உமா ரியாஸ் தம்பதியரின் மகனும், விளையாட்டு வீரரும், ‘பென்சில்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான ஷாரிக் ஹாசன்,

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவரும், விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்தவரும், கருத்துவேறுபாடு காரணமாக மனைவி நித்யாவையும், மகளையும் பிரிந்து வாழ்பவருமான தாடி பாலாஜி

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் வாய்ஸ் எக்ஸ்பர்ட்டும், ‘அவன் இவன்’ படத்தில் நடித்தவருமான அனந்த் வைத்தியநாதன்.

ஓவியா

இந்த 16 போட்டியாளர்களைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் போட்டியாளர் இல்லை, சிறப்பு விருந்தினர் மட்டும் தான். ஆனால் இது தெரியாததால், ஓவியா உள்ளே வருவதைப் பார்த்த போட்டியாளர்கள், குறிப்பாக பெண் போட்டியாளர்கள், ஓவியாவையும் போட்டியாளராக நினைத்து அப்செட் ஆகிவிட்டது அவர்களது முகங்கள் சட்டென கருத்ததில் தெரிந்தது.

 

Read previous post:
a9
“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்!

“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது” என்று ஆவேசமாக கூறினார் ‘ஆந்திரா

Close