ரூபாய் தாளில் கடவுளர் திருவுருவம் பொறிப்பதால் சுபீட்சம் வராது!

0a1bஇறையான்மையில் மதம் மூக்கை நுழைப்பது அருவருக்கத்தக்கது, திறமையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களால் தான் நாடு வளம் பெறுமே தவிர, கடவுளர் திருவுருவம், மத சின்னங்கள் ரூபாய் தாளில் பொறிப்பதால் சுபீட்சம் வராது.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதல்ல, இறையான்மையை கேள்விக்குறியாக்கும் செயல் இது, அப்படி கடவுளர்கள், மத சின்னங்கள் ரூபாயை அலங்கரிக்க வேண்டும் என்றால் அத்தனை மதங்களின் கடவுளரும் சின்னங்களும் வெவ்வேறு இந்திய ரூபாய் தாள்களில் இடம் பெறட்டும்.

ஒரு இந்திய ரூபாய் = 190 இந்தோநேசிய ருப்யாவாம். 1998ஆம் ஆண்டு இப்படி விநாயகர் படம் ருப்யா நோட்டுகளில் பொறித்தது எந்த சுபீட்சத்தையும் பொருளாதார மேன்மையையும் இந்தோநேசியாவுக்கு தரவில்லை.

Geethappriyan Karthikeyan Vasudevan பதிவு