யோலோ – விமர்சனம்

நடிப்பு: தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், ஸ்வாதி, திவாகர், கலைகுமார், நித்தி, சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன், தீபிகா, தீப்சன், கிரி துவாரகேஷ், மாதங்கி, கோவிந்தராஜ், பிரபு, பூஜா ஃபியா மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.சாம்
கதை: ராம்ஸ் முருகன்
திரைக்கதை: எஸ்.சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு: ஏ.எல்.ரமேஷ்
இசை: சகிஷ்னா சேவியர்
தயாரிப்பு: ‘எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ்’ மகேஷ் செல்வராஜ்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா
‘YOLO’ என்ற பெயரில் யுடியூப் சேனல் நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும். (”நீ ஒரு முறை தான் வாழ்கிறாய்” என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் ”You Only Live Once” என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் எடுத்து வைத்த பெயர் தான் ‘YOLO’.)
தங்கள் யுடியூப் சேனல் மூலம் ப்ராங்க் வீடியோ எடுப்பதை தொழிலாக செய்யும் இந்த நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடந்துவிட்டதாக சிலர் ஆதாரங்களுடன் நிரூபிப்பதோடு, அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தங்களுக்கே தெரியாமல் தங்களது திருமணம் நடந்திருப்பதால் அதிர்ச்சியடையும் நாயகனும், நாயகியும் அதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அவர்களது திருமண ரகசியத்தின் பின்னணி என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் தான் ’யோலோ’ திரைப்பட்த்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தேவ், இளமைத் துள்ளலுடன் இருக்கிறார். ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களையும் சரியாகக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ற வேடமும் அமைந்துவிட்டதால் இதில் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.
நாயகி தேவிகா, நாயகனுக்கேற்ற ஜோடியாக இருக்கிறார்.அவருடைய அழகுக்கும் இளமைக்கும் ஏற்ற கதாபாத்திரம். அதற்குத் தக்க அவருடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது.
ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், ஸ்வாதி, திவாகர், கலைகுமார், நித்தி, சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன், தீபிகா, தீப்சன், கிரி துவாரகேஷ், மாதங்கி, கோவிந்தராஜ், பிரபு, பூஜா ஃபியா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.சாம். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படியே செயல்பட்டிருக்கிறார்.
சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓ.கே ரகம்.
சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ண மயமாக இருக்கிறது.
ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பில் படம் வேகமாக நகர்கிறது.
‘யோலோ’ – ஒருமுறை பார்க்கலாம்!
ரேட்டிங்: 2.5/5