“கேடி ராகவனை விளாசிய சீமான் பக்கம் தான் நான்!”

காணொளி பார்த்தேன். சிறப்பாக இருந்தது. நான் சீமான் பக்கம்தான்.

‘பசும்பொன்’ என ஒரு படம். பாரதிராஜா இயக்கியது. சீமான் கதை எழுதியது. படத்தில் பிரபுவின் தாய், கணவன் இறந்ததும் இரண்டாவதாக சிவகுமாரை மணம் முடித்துக் கொள்வார். மூத்தவருக்கு பிறந்த பிரபு அதிலிருந்து தாயை புறக்கணித்து விடுவார். தாத்தா சிவாஜியிடமே வளருவார்.

சிவகுமார்-ராதிகா தம்பதிக்கு மகன்கள் இருப்பார்கள். அதாவது பிரபுவுக்கு தம்பிகள். சற்று அடாவடி பேர்வழிகள். அண்ணனுக்கு கிடைக்கும் ஊர் மரியாதை கண்டு பொருமிக் கொண்டே இருப்பார்கள். அண்ணனை நக்கல் அடித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டுமே திரிவார்கள்.

தம்பிகளுக்கும், ஊருக்குள் சாராயம் காய்ச்சிப் பிழைக்கும் பெரிய மனிதன் ஒருவனுக்கும் பிரச்சினையாகி விடும். பெரிய மனிதன், ஆட்களுடன் கிளம்பி வந்து, அந்த தம்பிகளை அடிப்பான். ஊரே மல்லுக்கட்டை வேடிக்கை பார்க்கும். சேதி பிரபுவின் காதுக்குப் போகும். ராதிகாவும் வயதான காலத்தில், ‘என் மகனுகள இப்படி அடிக்கிறாய்ங்களே… கேட்குறதுக்கு நாதியே இல்லையே’ என அழுதபடி ஓடி வருவார்.

திடீரென பிரபு நுழைந்து பெரிய மனிதனின் ஆட்களை அடிக்க துவங்குவார். தம்பிகள் அவரை ஆச்சரியத்துடனும் நன்றியுடனும் பார்ப்பார்கள். எல்லாரையும் அடித்துப் போட்டுவிட்டு கிளம்பும்போது பிரபு சொல்லுவார், “நான் என் தம்பிகள அடிப்பேன். எவனும் என்னை கேட்கக் கூடாது. என் தம்பிகளை வேற எவனாவது அடிச்சா, நான் கேட்பேண்டா” என்று.

சீமானுக்கும் திராவிடம் பேசுபவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். இங்கிருந்து சென்றவர்தான் அவர். ஆனால் அதற்காக அவரை கண்ட கண்ட KT ராகவன்களெல்லாம் கேள்வி கேட்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அந்த காணொளியில் சீமான் பேசியதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, அவரை கேள்வி கேட்க ராகவன் யார்?

தமிழ்நாட்டையும், தமிழ் பண்பாட்டையும் பேச என்ன அருகதை இருக்கு ராகவனுக்கு? கீழடியை நாசமாக்க முயலும் ராகவன் வகையறாவை எல்லாம் சீமான் வெறும் ஒருமையில் பேசியதோடு விட்டதுதான் என் கோபமெல்லாம்.

‘மிஸ்டர் ராகவன், உங்களுக்கு ஜால்ரா தட்டுற டிவிக்கு போய் ஏசி ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு, ‘அவரு என்ன ஒருமையில பேசுறாரு’ன்னு கொதிக்கிறீரே, அப்படியே கொதிக்கிற வெயில்ல தெருவுல எறங்கி, ரோட்டுல போறவன்கிட்ட போய் உம்ம மொகத்த காட்டும். வண்ட வண்டயா ஆரம்பிச்சு உம்ம பரம்பரைய எல்லாம் இழுத்து சந்தி சிரிக்க வைச்சிடுவான் உங்க வகையறா எல்லாம் பண்ணிக்கிட்டிருக்கற வேலைக்கு. அவ்ளோ திமிரு பேச்செல்லாம் உம்ம ஒடம்புக்கு ஆகாது. பருப்பு தின்னே வளர்ந்த ஒடம்பு, பாத்துக்கிடுங்க. ஒரு நாள் வரும்.. ஆல் ஆர் வெயிட்டிங் ஈகர்லி….’

RAJASANGEETHAN JOHN