விலங்குரிமையின் ஒரு மாபெரும் குரல் அமைதியாகி இருக்கிறது…

ஜேன் குட்ஆல் (Jane Goodall) ஒரு விலங்குரிமை ஆர்வலர்.

இள வயதில் இருந்து சிம்பான்சிகளுடன் பழகி அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் குறித்து ஆய்வுகள் செய்து வந்தவர். சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்புக்காக Jane Goodall Institute எனும் இயக்கம் துவங்கி நடத்தியவர். விலங்குரிமைக்காக Nonhuman Rights Project எனும் நிறுவனத்தையும் துவங்கியவர். விலங்குகளை சொத்துகளாகக் கருதாமல் அவர்களையும் சட்டரீதியான நபர் போல (Legal Persons) அணுக வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள், வழக்குகள் மேற்கொண்டவர். விலங்குரிமை பற்றிய விழிப்புணர்வு உலகெங்கும் வேர்கொண்டதில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக மேற்கு நாடுகளில் விலங்குரிமையின் சின்னமாகவே ஜேன் கருதப்படுகிறார்.

ஜேன் குட்ஆல் நேற்று தனது 91வது வயதில் காலமாகி இருக்கிறார். விலங்குரிமையின் ஒரு மாபெரும் குரல் அமைதியாகி இருக்கிறது.

வருங்காலத்தில் உலகின் நாகரிக வளர்ச்சி கொண்ட பகுதிகளெங்கும் விலங்குகள் Legal Persons அந்தஸ்தைப் பெறப்போகின்றன. அப்போது ஜேன் குட்ஆலின் பெயர் வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும்.

So long and thank you, ma’am.

-வருத்தத்துடன் சிம்பான்சிகளும் அவற்றின் சித்தப்பா மகன் ஸ்ரீதரும்.

SRIDHAR SUBRAMANIAM