ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’!

கார்த்திகேயன் வழங்க, மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஜா இதில் நடிக்கிறார்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் விஜய் ஆர்.ஆனந்த் – ஏ.ஆர்.சூரியன். இப்படம் பற்றி இயக்குனர்கள் கூறுகையில், “சதுரங்க வேட்டை’ மாதிரியான படம் இது. ஆனால் ‘சதுரங்க வேட்டை’ ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களை பதிவு செய்தது. ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை  பதிய வைத்திருக்கிறோம். ஒரு நாடு வல்லரசு நாடாக உருவாக வேண்டுமானால் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர்மறையான விஷயம் தான் இப்படத்தின் மையக்கரு.

இதன் படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன” என்றார்கள் இயக்குனர்கள்.

ஒளிப்பதிவு – அருண்மொழி சோழன்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – ருக்சீனா, இந்துமதி, எழில்வேந்தன், தென்றல், ஸ்ரீகாந்த் தேவா

கலை – ஏ.எஸ்.சாமி

நடனம்  – பாபி, தினேஷ், இருசன், அபீப்

ஸ்டண்ட் – ஹரி தினேஷ்

எடிட்டிங் – எஸ்.பி.அகமது

தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம், ரபீக்.

கதை – பெரோஸ்கான்

தயாரிப்பு – ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

 

Read previous post:
v10
Vilaiyattu Aarambam Movie Gallery

Vilaiyattu Aarambam Movie Photos

Close