வாகை சந்திரசேகர் மகள் திருமண விழாவில் பிரபலங்கள்!

வாகை சந்திரசேகர் – கே.சி.ஜெகதா சந்திரசேகர் மகள் ஜே.சி.சிவநந்தினிக்கும், பழனி சித்தநாதன் அன் சன்ஸ் பேரனும் எஸ்.ஜி.ரவீந்திரன் – ஆர்.சாந்தியின் மகன் ஆர்.தினேஷ் குமாருக்கும் 02.02.2017 அன்று பழனியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராதாரவி, பிரபு, நெப்போலியன், தியாகு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.