சேரன் இயக்கும் ‘திருமணம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: விஜய் சேதுபதி வெளியிட்டார்!

’பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் சேரன், நீண்ட இடைவெளிக்குப்பின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து, இயக்கும் படத்துக்கு ‘திருமணம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரன்னிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கும் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிக்கிறார். இவர்களுடன் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், காவ்யா சுரேஷ், ஜெயபிரகாஷ், மனோபாலா, பாலசரவணன், சீமா ஜி.நாயர், அனுபமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்வேல் தாமோதரன் படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி, லலிதானந்த், சேரன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். அசோக்ராஜன், பாலகுமார், ரேவதி, சஜன நஜம் ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு ‘திருமணம்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

 

Read previous post:
k6
21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…

வருகிற (டிசம்பர்) 21ஆம் தேதி திரைக்கு வரும் படம் ‘கே.ஜி.எஃப்’. நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக

Close